நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஜே.கே.கே நடராஜா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 14-11-2025 வெள்ளிக்கிழமையன்று மாலை 5 மணி அளவில் கொங்கு மஹாலில் ஜே.கே.கே நடராஜா அய்யாவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் வகையில் “ நிலைத்த புகழுக்கு காரணம் ‘’ மக்கள் தொண்டா மகேசன் தொண்டா எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.



விழாவின் தொடக்க நிகழ்வாக தீபத்திருவிளக்கினை ஏற்றி விழா துவக்கி வைக்கப்பட்டது. திரு ஜே. கே. கே நடராஜா அய்யாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. இப்பட்டிமன்ற நிகழ்விற்கு ஜே.கே. கே நடராஜா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமதி. N.செந்தாமரை அம்மா அவர்கள் தலைமையேற்று வரவேற்புரை நல்கினார். கல்லூரி நிர்வாக இயக்குநர் திரு.ஓம். சரவணா அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.


கல்லூரி நிர்வாகத்தின் தலைமை அதிகாரி திரு. ரங்கராஜ ராகவாச்சாரி அவர்கள் பட்டிமன்ற நடுவர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை பற்றி அறிமுகவுரையாற்றினார்.

பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு நடுவராக கலைமாமணி பேராசிரியர் முனைவர். கு. ஞானசம்பந்தன் அவர்கள் இந்நிகழ்வை இனிதாக வழிநடத்தினார். நிலைத்த புகழுக்கு காரணம் மக்கள் தொண்டா! மகேசன் தொண்டா! என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில் மக்கள் தொண்டே என்று தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நாகமுத்து பாண்டியன் அவர்களும் சொல்லரசி, பேராசிரியர், கோவை.பொன் பூங்கொடி அவர்களும் வாதிட்டனர். எதிரணியில் மகேசன் தொண்டே என்று நாஞ்சில் நாவரசு செல்ல. கண்ணன் அவர்களும் இசைக்குயில் பேராசிரியை,முனைவர், ஸ்ரீ மதி தியாகராஜன் அவர்களும் வாதிட்டனர். இருவரின் வாதத்தையும் கேட்ட நடுவர் அவர்கள் நிலைத்த புகழுக்கு காரணம் மக்கள் தொண்டே என்று நல்ல தீர்ப்பை வழங்கினார். இறுதியில் புலமுதன்மையர் திருமதி. V. R பரமேஸ்வரி அம்மா அவர்கள் நன்றியுரை நவில நாட்டுப்பன்னுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.












