ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவு சார்பில் மகாகவி பாரதியாரின் 143 வது பிறந்தநாள் விழா 11.12.2024 முற்பகல் 11 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்.ப பூங்குழலி அவர்கள் தலைமையேற்று தலைமையுரையாற்றுகையில் பாரதியின் தத்துவக் கருத்துக்களைக் கூறி மாணவர்கள் பாரதியைப் பின்பற்ற வேண்டுமென்றும், மனதில் சலனம் ஏற்படும்போதெல்லாம் பாரதி நூல்களை படித்தால் தன்னம்பிக்கையும் மன தைரியமும் ஏற்படுமென்றும், ஒருவருக்கு நல்ல நண்பன் புத்தகங்களே என்று குறிப்பிட்டார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் அ. குமார் அவர்கள் வரவேற்புரையையும் நிகழ்ச்சியைத் தொகுத்தும் வழங்கினார் .மற்ற துறைத் தலைவர்களும், துறை உதவிப் பேராசிரியர்களும் கலந்து கொண்டு பாரதியின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பிறகு மாணவ— மாணவியர்கள் பாரதியின் கவிதைகள், பாடல்கள் ,வரலாறு ஆகியவற்றைப் பற்றி உரை நிகழ்த்தினார்கள்.